Friday, July 10, 2009

ஜெய் தொந்தி!

எனக்கு கிடைத்த மின்னஞ்சல் இது.. நீங்களும் ரசிக்கலாமே!!!!

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை
காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய
தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல்
சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக்
கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட
மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும்
நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி
கொண்ட தொந்திகளையே.

பாடலாசிரியர் வைரமுத்து கூட,

நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக
இருந்திருக்கும்.

நீ பந்தி
நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.

அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில்
ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.

என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில்
இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும்
வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின்
தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை
உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து
வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

ஜெய் தொந்தி!

Friday, July 3, 2009

உனக்குள் நான்

உனக்குள் நான் ஒரு தீயாய் (ஒருத்தியாய்)
இருந்தேன்.
ஏன் எனை விலக்கினாய்?
ஏன் வெறுத்தாய்?
எப்போதும் உன் நினைவில் -நான்
உலகமே என் வசம் போல்
அதீத கற்பனை கொண்ட நான்இ
உனக்காக காத்திருந்த நாட்கள்
பல மணித்துளிகள்
உன் அழைப்புக்காக காத்திருந்த தொலைபேசி
உன் குரல் கேட்க காத்துக் கிடந்த
என் காதுகள்
உனக்காகவே வாழ்ந்த நான்
எல்லாம் தெரிந்தும்
ஏன் எனை வெறுத்தாய்;;;;;

குளமான கண்களோடு
ஏங்கிக் கிடக்கிறேன்
உன் வருகையை எண்ணி அல்ல
உன் கனவில் நான்
வரவேண்டும் என
உனை பார்ப்பதற்காகவே
ஆலயம் சென்ற நாட்கள்
உன் குரல் கேட்பதற்காகவே
உன்னுடன் சண்டை
போட்ட நாட்கள்
உன்னோடு பயனித்த
பேருந்து பயணம்
உன்னோடு பரிமாறிய
காலை உணவு
தூங்கினாலும்
என் கண்ணுக்குள்
முள்ளோடு றோஜாவாய்.

உன் விரல் நுனி
தீண்டிய போது
ஏற்பட்ட குறுகுறுப்பு
உன் தொடுகையின்
முதன் ஸ்பரிசம்
என் தலையை வருடிய
உன் கைகள்
இன்னும் நெஞ்சுக்குள்
நெருஞ்சி முள்ளாய்.
உன்னோடு சேர்ந்து
ரசித்த சினிமா
உன்னோடு சுற்றிய
இராட்டினம்
நீங்காத நினைவுகளாய்
இன்னும் எனக்குள்ளே

உன் ஏக்கத்தில்
பிறந்ததல்ல
இக் கவி
உன் நினைவுகளை
என்னிடமிருந்து
எடுப்பதற்காகப்
பிறந்தது.

Sunday, June 14, 2009

காதல்

உன்னை காதலித்த
நாள் முதலாய்
என்னை
கண்ணீரும்
காதலிக்கத் தொடங்கி விட்டது
கண்ணீருள்
காலுக்குக் கூட
இரவுகள் துணை பெறுகின்றன !
விடியல்
மலர மறுக்கிறது
நினைவுகள்
நீங்க மறுக்கிறது !